Posts

Showing posts from March, 2012

நதியே அடி நயில் நதியே (Nathiyae adi nile nathiyae)

Image
படம்: வானத்தை போல நதியே அடி நயில் நதியே நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் cherry தோட்டம் போட்டேன் ஒ நிலா உன் ஊர்வலமா அடி உன் முகம் பனி பூவனமா ஒ நிலா உன் ஊர்வலமா அடி உன் முகம் பனி பூவனமா நதியே அடி நயில் நதியே நனைந்தேன் உன் அழகினிலே மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே கண்ணில் आजा आजा கண்ணில் आजा आजा நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே காதல் आजा आजा காதல் आजा आजा Babylonன் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்தால் அதிசயிக்கும் அடி heater போட்டு வந்த புது waterfalls நீயா என்னை இன்பலோகம் சேர்க்கும் ஒரு satelliteம் நீயா நதியே அடி நயில் நதியே நனைந்தேன் உன் அழகினிலே உந்தன் பேரை சொல்லி சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும் இன்பமாகும் இன்பமாகும் தீயப்போல நீயும் வந்து தீக்குளிப்பதே சொர்க்கமாகும் சொர்க்கமாகும் நூறு gram தான் இதயம் அதிலே நூறு tonஆய் உன்நினைவு அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதியில்லை உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த Newton இங்கு ...

கூடையில கருவாடு (Koodaiyila karuvaadu)

Image
படம்: ஒரு தலை ராகம் பாடியவர்: மலேசியா வாசுதேவன் உணர்வு: உற்சாகம் கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னடி பொருத்தம் ஆய என் பொருத்தம் இதைபோல தாளமில்லா பின்பாட்டு ஆஹா தாளமில்லா பின்பாட்டு கட்டுகட்டு என் கூத்து என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று அம்மாளு அம்மாளு கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே அல்லிவட்டம் புள்ளிவட்டம் நானறிஞ்ச நிலாவட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்திகெட்ட விதியாலே ஆஹா புத்திகெட்ட விதியாலே போறவ தான் என்மயிலு என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று அம்மாளு அம்மாளு கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு மாயூரத்து காள ஒன்னு பாடுதடி மயங்கி நின்னு ஓடாதடி காவேரி உன் மனசில் யாரோடி என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று அம்மாளு அம்மாளு கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன்...

தீர்த்த கரையினிலே (Theertha karaiyinilae)

Image
படம்: வறுமையின் நிறம் சிகப்பு தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி ஆஆ  பாவை தெரியுதடி தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி ஆஆ பாவை தெரியுதடி மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுதுபார் மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில்

மெல்லினமே மெல்லினமே (Mellinamae mellinamae)

படம்: ஷாஜஹான் உணர்வு: ஏக்கம் மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பார்க்கும் நான் தூரத்தெரியும் வானம் நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பார்க்கும் வீசிப்போன புயலில் என் வேர்கள் சாயவில்லை ஒரு பட்டாம்பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன் நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு துடிப்பிலும் உன்பேர் சொல்லுதடி கனவுப்பூவே வருக உன் கையால் இதயம் தொடுக எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பார்க்கும் மண்ணை சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை மண்ணை சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி உன்னை காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை உன்னை...

வெத்தல போட்டேன் சோக்குல (Vethala pottaen sokula)

படம்: அமரன் போட்டாலே விறுவிறுக்கும் ஜருத்தா பட் அமரன் கானா பாட்ட கேட்டாலே கிறுகிறுக்கும் மச்சி நான் வெத்தல போட்டேன் சோக்குல... போடு வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம் வாராவதி இறக்கம் அமரன் வந்து நின்னா சரக்கும்  அமரன் பேர சொன்னா தானே soda bottle பறக்கும் ஐசாலக்கடி மெட்டு தானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம் பக்கிரி பிச்சுவா பக்கிரி சுத்துனா கத்திய சுத்துனா டகுலு தான் ஊருல டகுலு தான் locku தான் policeuக்கு locku தான் அண்ணாத்த நம்மாளு போட்டாக்க அம்பேலு டாராகும் உன் தோளு வேணாண்ட வீண் வம்பு ஐசாலக்கடி மெட்டு தானுங்க அமரன் பாட்டுல தான் கெட்டிகாரங்க வெத்தல போட்டேன் சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம் டக்கரு பந்தலொன்னு போடவா சக்கர மேடை கட்டி ஆடவா சுத்துற மாப்பிள தேடவா superஉ கச்சேரி பாடவா மத்தாப்பு சிங்காரி மைனா உன் க...

மலையாள கரையோரம் (Malayala karaiyoram)

Image
படம்: ராஜாதி ராஜா உணர்வு: வியப்பு சிலுசிலுவென குளிர் அடிக்குது அடிக்குது சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கிறதே மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி நீரில் மெள்ள சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள நீலவானம் அதில் எத்தனை மேகம் நீர்கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும் காட்டோரம் மூங்கில் கூட்டம் வாசம் வீச காதோடு எதோ சொல்லி ஜாடை பேச தேக்கும் பாக்கும் கூடாதோ தோளை தொட்டு ஆடாதோ பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ என்மனம் துள்ளுது தன்வழி செல்லுது வண்ண வண்ண கோலம் மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா மலையாள கரையோரம் தமிழ் ...

கோட்டைய விட்டு (Kottaiya vittu)

Image
படம்: சின்ன தாயி உணர்வு: ஏக்கம் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி கொட்டவேணும் மேளம் கைய கட்ட வேணும் யாரும் அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா விலை ஏறி போகுது marketல அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா விலை ஏறி போகுது marketல விலை ஏறி போகுது marketல என்னாட்டம் ஏழைங்க அதவாங்கி திங்கத்தான் துட்டுல சாமி என் pocketல துட்டுல சாமி என் pocketல வீட்டுக்கு வீடு எங்களத்தான் மரம்மொன்னு வைக்க சொல்லுறாக மரமே தான் எங்க வீடாச்சு சாமி ஏழைங்க வாயில் மெல்லுராக எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னால தான் கண்ணால பாரு நிறைவேற்றி காட்டு முன்னால தான் கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி ஊர்சுத்தும் சாமியே நீகொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழைய பார்க்கணுமே ஊர்சுத்தும் சாமியே நீகொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழை...

சாதிமல்லி பூச்சரமே (Saathi malli poocharamae)

Image
படம்: அழகன் உணர்வு: எழுச்சி சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னிதமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான் தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்று தான் கடுகு போல் உன்மனம் இருக்க கூடாது கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும் உன்னைப்போல் எல்லோரும் என எண்ணனும் அதில் இன்பத்தை தேடோணும் சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி உலகமெல்லாம் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம் உலகமெல்லாம் சிரிக்கும் போது நாமும் புன்னகை சிந்துவோம் யாதும் ஊரென்ன யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி யாதும் ஊரென்ன யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி படிக்கத்தான் பாடலா ...

சங்கீத ஸ்வரங்கள் ஏழே (Sangeetha swarangal ezhae)

படம்: அழகன் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் நெஞ்சில் என்னவோ நெனச்சு நானும் தான் நெனச்சு ஞாபகம் வரல யோசிச்சா தெரியும் யோசனை வரல தூங்குனா விளங்கும் தூக்கமும் வரல பாடுறேன் மெதுவா உறங்கு என்னனென இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்று தான் வந்தது சொர்க்கம் விண்ணிலே திறக்க நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி தேன்மழை பொழிய பூவுடல் நனைய காமனின் சபையில் காதலின் சுவையில் ஆடிடும் கவிதை சுகம் தான் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

பார்த்து பார்த்து கண்கள் (Paarthu paarthu kangal)

படம்: நீ வருவாயென பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன் நீ வருவாயென நீ வருவாயென பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென்ன தினம் தினம் சேகரித்தேன் குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன் கவிதை நூலோடு கோல புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன் இரவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன் ஒரு காகம் காவென கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன் நீ வருவாயென நீ வருவாயென பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென எனக்குள்ள வேதனைகள் நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை எழுதிய கவிதைகள் உனைவந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை உலகில் பெண்வர்க்கம் நூறுகோடியாம் இதிலே நீயாரோடி ...

பாடும் போது நான் தென்றல் (Paadum pothu naan thendral)

படம்: நேற்று இன்று நாளை பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று நான் வரும் போது ஆயிரம் பாடல் பாடவந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியை கொஞ்சம் அணைத்து இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று எல்லைகள் இல்ல உலகம் என் இதயமும் அது போல் நிலவும் புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் யாரும் வாழ வாடும் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று நான் வரும் போது ஆயிரம் பாடல் படவந்ததென நெஞ்சம்...

சந்தோசம் சந்தோசம் (Santhosam santhosam)

படம்: யூத் சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்தடி தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மையென்று...

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி (Pennoruthi pennoruthi)

படம்: ஜெமினி உணர்வு: வியப்பு பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா இது தகுமா ஐயோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் கண்களிலே பௌத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன் பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்தேன் புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன் புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாய் மலையென்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாய் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா இது தகுமா ஐயோ இது வரமா சாபமா பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் பகலெல்ல...

முதன் முதலில் பார்த்தேன் (Muthan muthalil paarthaen)

படம்: ஆஹா முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே என்னை மறந்து எந்தன் நிழல் போகுதே என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால் தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே உத்தரவே இன்றி உள்ளே வா நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில் உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன் உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன் என் சுவாச காற்றில் எல்லாம் உன் ஞாபகம் உன் ஞாபகம் முதன் முதலில...

கல்யாண மாலை கொண்டாடும் (Kalyana maalai kondaadum)

படம்: புதுபுது அர்த்தங்கள் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன் ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாழி நேசமொரு கோடி சந்தோஷ சாம்ராஜ்யமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன் கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் கவிஞன் பாராட்டும் கலைஞன் பாடாத நாளில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சிலநேரம் கூடிவரும் போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என்சோகம் என்னோடுதான் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்

நம்ம ஊரு சிங்காரி (Namma ooru singaari)

படம்: நினைத்தாலே இனிக்கும் நம்ம ஊரு சிங்காரி singapore வந்தாளாம் பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம் பாலாடை போலாடும் பாப்பா எப்போதும் நான் சொன்னா கேப்பா ராஜாவை பார்க்காமல் ரோஜா ஏமாந்து போனாளோ லேசா நான் நாள வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து நீயின்றி போவேனோ சம்போ நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடிமேல உன்னவச்சு பார்க்காமல் போவேனோ சம்போ மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா நம்ம ஊரு சிங்காரி singapore வந்தாளாம் பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம் அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தால் தாளம் சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல் அந்த தேவதைக்கு நீயும் சொந்தம் தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா நம்ம காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்று தாம்மா மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நம்ப சங்கதி சொன்னானா நம்ம ஊரு சிங்காரி singapore வந்தாளாம் பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்