கல்யாண மாலை கொண்டாடும் (Kalyana maalai kondaadum)

படம்: புதுபுது அர்த்தங்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாழி நேசமொரு கோடி சந்தோஷ சாம்ராஜ்யமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் கவிஞன் பாராட்டும் கலைஞன் பாடாத நாளில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் கூடிவரும் போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என்சோகம் என்னோடுதான்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)