தீர்த்த கரையினிலே (Theertha karaiyinilae)
படம்: வறுமையின் நிறம் சிகப்பு
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி ஆஆ
பாவை தெரியுதடி
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுதுபார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
Nice song to read and re read
ReplyDeleteஏமாற்றம் வலி அருமையான பாடல்
ReplyDeleteகாதலின் பிரிவை , நேசித்தலின் வலியை அழகாய் சொல்லுகிறது.இதற்காக ஒரு பிரிவை சந்த்திக்கலாமென மனசு விழைகிறது..
ReplyDelete