சந்தோசம் சந்தோசம் (Santhosam santhosam)

படம்: யூத்

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்தடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்வது நம்முடைய பிழை இல்லையே
துன்பம் என்ற சிப்பிக்குள்தான் இன்பம் என்ற முத்துவரும் துணிந்தபின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)