மலையாள கரையோரம் (Malayala karaiyoram)

படம்: ராஜாதி ராஜா
உணர்வு: வியப்பு

சிலுசிலுவென குளிர் அடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கிறதே

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா
கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி

நீரில் மெள்ள சிறு நெத்திலி துள்ள
நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள
நீலவானம் அதில் எத்தனை மேகம்
நீர்கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்
காட்டோரம் மூங்கில் கூட்டம் வாசம் வீச
காதோடு எதோ சொல்லி ஜாடை பேச
தேக்கும் பாக்கும் கூடாதோ தோளை தொட்டு ஆடாதோ
பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ
என்மனம் துள்ளுது தன்வழி செல்லுது வண்ண வண்ண கோலம்

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா
கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி

தூறல் உண்டு மழைச்சாரலுமுண்டு
பொன்மாலை வெய்யில் கூட ஈரமாவதுண்டு
தோட்டம் உண்டு கிளிகூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளை போல வாழ வேண்டும்
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்
எண்ணம் எண்ணும் சிட்டு தான் ரெக்கை கட்டி கொள்ளாதோ
எட்டுத்திக்கும் தொட்டுத்தான் எட்டி பாய்ந்து செல்லாதா
என்மனம் துள்ளுது தன்வழி செல்லுது வண்ண வண்ண கோலம்

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலைமுடியினில் பனி வடியுது வடியுது மண் மனக்குதம்மா
கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி


Comments

  1. siru arumbugal manam? -> malar? arumbu sollitaanga so malar? ( sounds manal)
    மனம் விட்டு மனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கிறதே -> vanam விட்டு vanam vandha
    அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி -> thanaiyaatum aruvi?
    மலையழகினில் மனம் கரையுது -> kalaiyzhaginil?


    பிள்ளைக்கும் -> killai ( kili -> killai)
    எண்ணும் எண்ணும் சிட்டு -> ennam ennum

    ReplyDelete
  2. Nice lyrics,, You can check more Tamil song lyrics

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)