பார்த்து பார்த்து கண்கள் (Paarthu paarthu kangal)

படம்: நீ வருவாயென

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென்ன தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோல புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
இரவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென

எனக்குள்ள வேதனைகள் நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனைவந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறுகோடியாம் இதிலே நீயாரோடி
சருகாய் அன்பே நான் காத்துகிடக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து உன் விழி பார்த்து இருவிழிகள் தேய்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்து பூத்து புன்னகை பூத்திருபேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)