பாடும் போது நான் தென்றல் (Paadum pothu naan thendral)

படம்: நேற்று இன்று நாளை

பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று

நான் வரும் போது ஆயிரம் பாடல் பாடவந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே

பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று

எல்லைகள் இல்ல உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழ வாடும் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே

பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று

நான் வரும் போது ஆயிரம் பாடல் படவந்ததென நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)