சங்கீத ஸ்வரங்கள் ஏழே (Sangeetha swarangal ezhae)

படம்: அழகன்

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சு
நானும் தான் நெனச்சு
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
தூங்குனா விளங்கும்
தூக்கமும் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு

என்னனென இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்று தான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
ஆடிடும் கவிதை சுகம் தான்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)