சாதிமல்லி பூச்சரமே (Saathi malli poocharamae)

படம்: அழகன்
உணர்வு: எழுச்சி

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னிதமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்
தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்று தான்
கடுகு போல் உன்மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப்போல் எல்லோரும் என எண்ணனும்
அதில் இன்பத்தை தேடோணும்

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி

உலகமெல்லாம் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென்ன யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென்ன யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சு பார்த்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி

என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னிதமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு


Comments

  1. காதலில் உண்டாகும் சுகம் மறப்போம் ->sugam "eppodhu" marappom

    கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாளாச்சு -> naadachu

    உன்னைப்போல் எல்லோரும் என என்னோடும் -> ennonum
    அதில் இன்பத்தை தேடோடும் -> thedonum

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)