கோட்டைய விட்டு (Kottaiya vittu)

படம்: சின்ன தாயி
உணர்வு: ஏக்கம்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி
சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி
கொட்டவேணும் மேளம் கைய கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி
சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி
அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா விலை ஏறி போகுது marketல
அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா விலை ஏறி போகுது marketல
விலை ஏறி போகுது marketல
என்னாட்டம் ஏழைங்க அதவாங்கி திங்கத்தான் துட்டுல சாமி என் pocketல
துட்டுல சாமி என் pocketல

வீட்டுக்கு வீடு எங்களத்தான் மரம்மொன்னு வைக்க சொல்லுறாக
மரமே தான் எங்க வீடாச்சு சாமி ஏழைங்க வாயில் மெல்லுராக
எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் உன்னால தான்
கண்ணால பாரு நிறைவேற்றி காட்டு முன்னால தான்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி
சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

ஊர்சுத்தும் சாமியே நீகொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழைய பார்க்கணுமே
ஊர்சுத்தும் சாமியே நீகொண்ட கண்ணாலே என்னாட்டம் ஏழைய பார்க்கணுமே
என்னாட்டம் ஏழைய பார்க்கணுமே
எல்லோரும் போலென்னை நீயும் தான் தள்ளாம்ம எந்நாளும் தாயென காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கணுமே
எப்போதும் காவல் நானிருப்பேன் என்னனென்ன வேணும் நான் கொடுப்பேன்
பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான் புண்ணாகி போச்சு எம்மனம் தான்
என்னாட்டம் சாமி எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான்
என்னோடு நீயும் உன்னோடு நானும் ஒன்னாகத்தான்

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடசாமி
சுடலமாடசாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி
கொட்டவேணும் மேளம் கைய கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம்

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)