விண்ணோடும் முகிலோடும் (Vinnodum Mugilodum)

படம்: புதையல்

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே
விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

தேடாத செல்வ சுகம் தானாக  வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்கபோகமே
ஓடோடி வந்த சொர்கபோகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே

விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோசம் காண உள்ளம் நாடுதே
சந்தோசம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே

விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

Comments

  1. Malar vittu malarai tavutanalla katal is right lyrics

    ReplyDelete
  2. Tavutanalla is one word in this lyrics is that sentence have small corrections

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)