நறுமுகையே நறுமுகையே (narumugaye narumugaye)
படம்: இருவர் ஆக்கம்: வைரமுத்து நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா திருமகனே திருமகனே நீயொரு நாழிகை பாராய் செந்நிற புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன பாண்டினாடனை கண்டு என்னுடல் பசலை கொண்டதென்ன நிலவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் நிலவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையில் மேகலை இருக்கவில்லை நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நீண்டதென்ன யாயும் யா...