மனம் விரும்புதே (manam virumbuthae)

படம்: நேருக்கு நேர்
ஆக்கம்: வைரமுத்து
உணர்வு: ஏக்கம்

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா
ஐய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீயொரு பார்வை பார்த்தாய்
அழகாய் தானொரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது, வெட்டியது
அதிலே என் மனம் தேயும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது, ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா
ஐய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறைபோல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டு  கரும்பாறை மேலே
தலைகாட்டும் சிறு பூவை போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடா காத்தடா
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா

நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா
ஐய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா
ஐய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)