இருபது கோடி நிலவுகள் (irubathu kodi nilavugal)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
ஆக்கம்: வைரமுத்து

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில்ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வனிதை உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ

July மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
Tajmahalஇன் வண்ணம் மாற கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
நிறம் உள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்ணும் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில்ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)