வெற்றிக்கொடி கட்டு (vetri kodi kattu)

படம்: படையப்பா
ஆக்கம்: வைரமுத்து
உணர்வு: தன்னம்பிக்கை

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா

கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று
பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா

நிக்க துணிவுண்டு இளைஞர்கள் பக்கத்துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா

வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா

கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று
பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா
வெட்டுக்கிளியல்ல நீயொரு வெட்டும்புலியென்று
பகைவரை வெட்டி தலை கொண்டு நடையெடு படையப்பா

நிக்க துணிவுண்டு இளைஞர்கள் பக்கத்துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)