ரோஜா பூந்தோட்டம் (Roja poonthotam)

படம்: கண்ணுக்குள் நிலவு

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி
புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

உன்னை நினைத்து நான் விழித்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணை இருந்தேன்
நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
பருவநிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருந்தேன்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறுகண்ணில்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறுகண்ணில்
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)