உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் (Unna nenaichaen paattu padichaen)

படம்: அபூர்வ சகோதரர்கள்
உணர்வு: ஏக்கம்

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சிலபேர் வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்டபிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான்

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

கண்ணிரண்டில் நான் தான் காதெலெனும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்டவிதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான்

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)