கண்ணே கலைமானே (kannae kalaimane)

படம்: மூன்றாம் பிறை
ஆக்கம்: கண்ணதாசன்
உணர்வு: தாலாட்டு

கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே
அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ

ஊமை என்றால் ஒருவகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில்பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே
அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீ தானென்றும் என் சந்நிதி

கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே
அந்திப்பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ
ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ
ராரீராரோ உராரீரோ ராரீராரோ உராரீரோ

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)