எங்கே எனது கவிதை (Engae enathu kavithai)

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆக்கம்: வைரமுத்து
உணர்வு: ஏக்கம்

பிறை வந்துவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்தென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் விம்மும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா
விடியல் அழித்து விட்டதோ அம்மம்மா
கவிதை தேடி தாருங்கள் இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெய்யில் தார் ஒழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே
உடையும் நுரைகளில் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்துவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்தென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் விம்மும்

பிறை வந்துவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்தென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் விம்மும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் என்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே கேட்குதே
பாறையில் செய்தது என்மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)