இளமை ஊரை சுற்றும் ஒருநாள் (illamai oorai sutrum)

படம்: மௌனம் பேசியதே
ஆக்கம்: வாலி
உணர்வு: தன்னபிக்கை
குறிப்பு: இந்த பாடல் திரைபடத்தில் இடம்பெறவில்லை

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்
இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்
கால்கள் இருக்கு அளந்துபார்க்க கைகள் இருக்கு அள்ளிசேர்க்க
யாரு இங்கே நம்மை கேட்க வாழ்க்கையை வாழ்ந்தே பார்போம் வா
நதிபோலே நடப்போமே அணைகள் போட்டால் உடைப்போமே
மலர்போலே சிரிப்போமே மனதை கடலாய் விரிப்போமே

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்

பாதைகள் ஒவ்வொன்றாக பயணம் செய் ஊர் ஊராக
உன்னுடன் எங்கேயும் வானம் வரும் துகுதுகுது
நட்பெனும் நூலைக்கொண்டு உறவெனும் தறியில் நின்று
நீலமிருக்கும் வானத்தை நெஞ்சமிருந்தால் தீண்டலாம்
மேகமிருக்கும் இமயத்தை மனதுவைத்தால் தாண்டலாம்  
நான் நினைத்தபடி போகும் வாலிபம்
நான் சிரித்தபடி வாழும் நாழிது
கண்ணில் கண்ணீர் ஏது

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்

அனுபவி யாவும் இன்று நேர் வழி நீயும் சென்று
எல்லைகள் கடந்தோடும் காற்றை போல துகுதுகுது
யாவர்க்கும் எல்லாம் என்று ஆக்கினான் ஒருவன் அன்று
குடைகள் நூறு தடுக்கலாம் மழையும் நின்று போகுமா
மழையை பார்த்து கடமையை மனிதஜாதி கற்குமா
வான் இயற்கை ஒரு பள்ளிக்கூடம் போல் யார்
இனியதொரு பாடம் சொன்னது நானும் நீயும் கேட்க

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்
இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்
கால்கள் இருக்கு அளந்துபார்க்க கைகள் இருக்கு அள்ளிசேர்க்க
யாரு இங்கே நம்மை கேட்க வாழ்க்கையை வாழ்ந்தே பார்போம் வா
நதிபோலே நடப்போமே அணைகள் போட்டால் உடைப்போமே
மலர்போலே சிரிப்போமே மனதை கடலாய் விரிப்போமே

இளமை ஊரை சுற்றும் ஒருநாள் இதுதான் வாலிபத்தின் திருநாள்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)