ஒரு பொன்மானை (oru ponmaanai)

படம்: மைதிலி என்னை காதலி
ஆக்கம்: டி. ராஜேந்தர்
உணர்வு: வியப்பு

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமாரை பூமீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜாதி எனும் மழையினிலே ரதி
இவள் நனைந்திடேவே
அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல கூத்தாட
மனம் எங்கும் மனம் வீசுது எந்தன்
மனம் எங்கும் மனம் வீசுது

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மனதிட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்புராவை மீட்டி சென்றாய்
கலைநிலா மேனியிலே
சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது எந்தன்
மதிதன்னில் கவி சேர்க்குது

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)