காதல் கடிதம் தீட்டவே (kaathal kaditham theetavae)

படம்: ஜோடி
ஆக்கம்: வைரமுத்து

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவுபகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொண்ணே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்
விரல்பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிபோகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது செத்து செத்து பூ பூக்கிறேன்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும் போதும் சினுங்கமாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
கண்ணே நான் உறங்கும் போதும் உறங்க மாட்டாயா
தப்பு செய்ய பார்த்தால் ஒப்புகொள்வாயா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவுபகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)