இரவு பகலை தேட (iravu pagalai thaeda)
படம்: கண்ணுக்குள் நிலவு
உணர்வு: ஏக்கம்
உணர்வு: ஏக்கம்
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்கும்மோ
அச்சச்சோ ஓ அச்சச்சோ
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அது ஒரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலை சேரா நதியைக்கண்டால்
தரையில் ஆடும் மீனை கண்டால்
ஒற்றை குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
வீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவை கூட்டம் கூட்டை தேடும்
பறவை போனால் பறவை கூடு யாரை தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளைக்கன்டால்
பிள்ளையில்லா அன்னைக்கண்டால்
அன்பே இல்லா உலகம் கண்டால் அச்சச்சோ
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்கும்மோ
அச்சச்சோ ஓ அச்சச்சோ
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
Good song lyrcs More Tamil song lyrics here
ReplyDelete