போகாதே போகாதே நீ (pogathae pogathae nee)

படம்: தீபாவளி
ஆக்கம்: நா. முத்துக்குமார்
உணர்வு: ஏக்கம்

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவே என்னை மூடுதடி
யாரென்று நீயும் எனை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே எந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அனைப்பதர்க்கு 
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதர்க்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ உயிரோடு பார்த்திருப்பேன் ஓ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல்
என் வாழ்வில் வந்தே ஆனாய்  ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீயில்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)