என்னவளே அடி என்னவளே (Yennavalae adi yennavalae)

படம்: காதலன்
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: வைரமுத்து

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்த்தை என்று உனை கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்துவரை இந்த காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனை பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சுவர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னை சாய்த்து கொண்டு உந்தல் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க உந்தன் விரலுக்கு சுளுக்கேடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வழிவிட்டு அனுப்பி வைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புது கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)