சின்ன சின்ன மழை துளிகள் (Chinna chinna mazhai thuligal)

படம்: என் சுவாச காற்றே
உணர்வு: வியப்பு
ஆக்கம்: வைரமுத்து

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி சிறு துளி மழை துளி 
பட பட பட பட படவென சிதறுதே

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா நான் சக்கரவாக பறவையாவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

ஒரு பூவினிலே விழுந்தாய் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தாய் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தாய் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்வாய்
அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய shower இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமா நான் சக்கரவாக பறவையாவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமா நான் சக்கரவாக பறவையாவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)