எனக்கொரு சிநேகிதி (Enakkoru snegidhi)

படம்: பிரியமானவளே
உணர்வு: ஏக்கம்

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்

மேகம் அது சேராது வான்மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்றை சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே

கைவளையல் குலுங்காமல் கால்கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு
உன்னை தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்களாச்சு
விரல்கள் கொண்டும் நீயும் மீட்டினால் விறகும் வீனையாகும்

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)