என்ன அழகு எத்தனை அழகு (Enna azhagu eththanai azhagu)

படம்: Love Today
உணர்வு: ஏக்கம்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு சிறுநெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழிப்பர்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்து விட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே

அன்பே உன் ஒற்றை பார்வை அதைத்தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கேட்டு இன்றுன்னை சந்த்திதேன்
காற்றும் கடலும் நிலமும் அடி தீக்கூட தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர்கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தான சோதித்தேன்
இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே

நான் கொண்ட ஆசையெல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசை தான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாற்றின் நெஞ்சம் தான்
வலியின் கொடுமை மொழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணை உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மகராணியே மலர்வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு சிறுநெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழிப்பர்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்து விட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)