விடிய விடிய நடனம் (Vidiya vidiya nadanam)

படம்: இதயத்தை திருடாதே
உணர்வு: தன்னம்பிக்கை


விடிய விடிய நடனம்
சந்தோசம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும்
மண்மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும்
நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும் தான் புதிய புதிய ஜனனம்
பயம் என்னடா எமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாக கூடும்

காலங்கள் உதயமாகட்டும்
கவலைகள் விலகி ஓடட்டும்
காட்டாறு நாமல்லவோ ஹே ஹேய்
வாமனிதா உலகை ஆளலாம்
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
ராஜாதி ராஜாக்கள் போல்
ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம் தானே
தப்பாத தாளங்கள் நாம் போட
தகதக தகதிமி தகஜணு

விடிய விடிய நடனம்
சந்தோசம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும்
மண்மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும்
நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும் தான் புதிய புதிய ஜனனம்
பயம் என்னடா எமனிடம்

பாடுங்கள் புதிய கீர்த்தனம்
எழுதுங்கள் புதிய சாசனம்
மாறட்டும் சமுதாயமே ஒ ஓஹோ
ஆடுங்கள் புதிய தாண்டவம்
அழியட்டும் பழைய தத்துவம்
அச்சங்கள் நமக்கில்லையே
ஓர்நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம்
ஓர்நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம் தப்பாத தாளங்கள் நாம் போட
தகதக தகதிமி தகஜணு

விடிய விடிய நடனம்
சந்தோசம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும்
மண்மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும்
நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும் தான் புதிய புதிய ஜனனம்
பயம் என்னடா எமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாக கூடும்

விடிய விடிய நடனம்
சந்தோசம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும்
மண்மேலே புது யுகம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)