வண்ணம் கொண்ட வெண்ணிலவே (Vannam konda vennilavae)

படம்: சிகரம்
உணர்வு: ஏக்கம்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லி கொள்ள வாழ்க்கை இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை பிரேதம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்து விட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)