வாலிப வயசுக்கு (Valiba vayasukku)

படம்: பூச்சூடவா
ஆக்கம்: பழனி பாரதி
உணர்வு: தன்னம்பிக்கை

வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு
Everest சிகரம் கூட எங்களுக்கு தோளளவு
கங்கைக்கு பள்ளம் கண்டு நடுக்கமா
காற்றென்ன passport எடுக்குமா
அழகை கண்டால் கைகள் கட்டு
அநியாயத்தை தலையில் கொட்டு
வட்டங்கள் போட்டுவைக்கும் சட்டங்களை தாண்டி விடு

(வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...)

வங்கத்தில் புயல் தான் இல்லையேல்
சென்னைக்கு மழை தான் இல்லையே
வாழ்கையில் சோதனை இல்லையேல்
உற்சாகம் இளமைக்கு இல்லையே
Sunday Monday பூவுக்கு இல்லை
பஞ்சாங்கம் எல்லாம் வாழ்க்கைக்கு தொல்லை
விருதுக்கு முத்தம் கொடு
வெற்றிக்கு Shakehand கொடு
அன்புக்கு விட்டுகொடு சுற்றும் பூமி நம்மை சுற்றும்

(வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...)

வாலிபம் நடக்கும் சாலையில்
கேள்விகள் எதுவும் இல்லையே
தோள்களில் இளமை உள்ளதால்
தோல்விகள் எதுவும் இல்லையே
மலை எதிர்த்தாலும் சட்டைய கழட்டு
வானத்தை கூட ஹேய் குப்புற புரட்டு
எங்கெங்கும் பச்சை கொடி
நிக்காது எங்கள் வண்டி
இன்னொரு சூரியனை வானத்திலே ஏற்றி வைப்போம்

(வாலிப வயசுக்கு வங்கக்கடல் காலளவு...)

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)