பாட்டு பாடவா (Pattu paadava)

படம்: தேன்நிலவு
உணர்வு: ஏக்கம்


பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
கண்ணிறைந்த காதலனை காணவில்லையே
இந்த காதலிக்கு தேனிலவில் ஆசையில்லையா
கண்ணிறைந்த காதலனை காணவில்லையே
இந்த காதலிக்கு தேனிலவில் ஆசையில்லையா
காதல் தோன்றுமா இல்லை காலம் போகுமா
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

Comments

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)