சின்னச்சின்னதாய் பெண்ணே (Chinna chinnathai pennae)

படம்: மௌனம் பேசியதே
உணர்வு: வேதனை

சின்னச்சின்னதாய் பெண்ணே என் நெஞ்சில் முட்களாய் தைத்தாய்
இருவிழியை வாள் கொண்டு வீசி இளமனதில் காயங்கள் செய்தாய்
துன்பம் மட்டும் என் உறவா உனை காதல் செய்ததே தவறா
உயிரே.... உயிரே....
காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

காதல் வெறும் மேகம் என்றேன் அடைமழையாய் வந்தாய்
மழையோடு நனைத்திட வந்தேன் நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே உன்னால் இசையாக மலர்ந்தேனே
என் உயிரோடு கலந்தவள் நீயே ஏ பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே
மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா

காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

உனையின்றி தனியாய் சென்றேன் என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன் என் விடையும் நீயென
வந்தாயே என் வழியில் காதல் தந்தாயே உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னேன்
உன் காதல் வேரோ மனதில் உனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

Comments

Popular posts from this blog

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)