நீ இல்லை நிலவில்லை (Nee illai nilavillai)

படம்: பூச்சூடவா
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: பழனி பாரதி

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை

உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன்
காதேலே என் காதலே ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்தது தானா சொல்லு

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை

பகலின்றி வாழ்ந்திருதேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்லு

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்

Comments

  1. Movie: Poochooda Vaa (1996);
    Music: Sirpy;
    Lyrics: Palani Bharathi;
    Singer: Hariharan;
    Cast: Abbas; Simran.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)