மடைதிறந்து தாவும் (Madai thiranthu)

படம்: நிழல்கள்

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது

காலம் கனிந்தது கதவுகள் திறந்ததுஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புதுராகம் படிப்பதாலே நானும் இறைவனே
புதுராகம் படிப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது

Comments

  1. நல்ல பாடல் வரிகள்...
    உங்கள் பதிவிற்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)