பாட்டு பாடவா (Pattu paadava)

படம்: தேன்நிலவு
உணர்வு: ஏக்கம்


பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் முடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
கண்ணிறைந்த காதலனை காணவில்லையே
இந்த காதலிக்கு தேனிலவில் ஆசையில்லையா
கண்ணிறைந்த காதலனை காணவில்லையே
இந்த காதலிக்கு தேனிலவில் ஆசையில்லையா
காதல் தோன்றுமா இல்லை காலம் போகுமா
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தயவு செய்து கீழே குறிப்பிட்டவற்றை சரி பார்க்கவும்.

    1. "நான் பாதை தேடி" என்பது "நானும் பாதை தேடி" என்று வரும் என்று நினைக்கிறேன்.
    2. "காதலனை காணவில்லையே" என்பது "காதலனை காணவில்லையா" என்று வரும் என்று நினைக்கிறேன்.
    3. "இல்லை காலம் போகுமா" என்பது "இன்னும் காலம் போகுமா" என்று வரும் என்று நினைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete

Post a Comment