அம்மா என்றழைக்காத (Amma enrazhaikkatha)
படம்: மன்னன்
உணர்வு: நன்றி
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி திருக்கோவில் தெய்வங்கள் நீ தானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற சிறு தொண்டன் நான் தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கின்று அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலைவைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
Comments
Post a Comment