விடுகதையா இந்த வாழ்க்கை (Vidukathaiya intha vaazhkai)

படம்: முத்து
உணர்வு: வேதனை


விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை
ஏழை நீதிக்கு கண் உண்டு பார்வை இல்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உன்னை கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
வந்து விழுகின்ற மழை துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மதம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது
கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்கு வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
இரண்டும் தீர்வதெப்போ

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று
கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உணை பாட காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
நாங்கள் போவதெங்கே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)