மாரிமழை பெய்யாதோ (marimazhai peiyatho)
படம்: உழவன்
உணர்வு: ஏக்கம்
கவள தண்ணி ஏறக்கு மச்சான்
ஏரபூட்டி உழுது வச்சான்
வித்த நல்ல எடுத்து வச்சான்
விதைக்க நாளும் காத்திருந்தான்
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு
கோலம் அழியவர கோடை மழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழைகிறங்கும் புண்ணியரே
சன்னல் ஒழுகாதோ சார மழை பெய்யாதோ
வடக்கே மழை பெய்ய வருங்கிழக்கே வெள்ளம்
குளத்தாங்கரையில ஐயிர துள்ளும்
கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்ச வயக்காடு நெஞ்சகிள்ளும்
நல்ல நெல்லு கதிரறுத்து புள்ள நெளிநெளியா கட்டு கட்டி
அவ கட்டு கொண்டு போகயிலே நின்னு கண்ணடிப்பான் அத்தைமகன்
உழவன் சிரிக்கணும் உலகம் ஜெயிக்கணும் மின்னலிங்கு படபடக்க
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
வரப்புல பொண்ணிருக்கு பொண்ணு கையில் கிளியிருக்கு
கிளியிருக்கும் கைய நீ எப்ப புடிப்ப
விதை எல்லாம் செடியாகி செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கைய புடிப்பேன்
ஒரு தண்டட்டி போட்ட புள்ள சும்மா தளதளன்னு வளந்த புள்ள
ராதவளை எல்லாம் குலவையிட நான் தாமர உன் மடிமேல
கனவுகள் பலிக்கணும் கழனி செழிக்கனும் வானம் கருகருக்க
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானம் கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர
சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Comments
Post a Comment