ஒரு கோலக்கிளி சோடி (Oru kolakilli)
படம்: உழைப்பாளி
ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே

உணர்வு: ஏக்கம்
அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே
அது இப்ப வருமோ எப்ப வருமோ
ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே
ஒரு சோலைகுயில் சோடி தன்ன தேடுது தேடுது மானே
அது நெஞ்சுங்கேட்டு நெனபுங்கேட்டு நிக்குது நிக்குது முன்னே
இப்ப வருமோ எப்ப வருமோ
ஆசை பொறந்தா அப்ப வருமோ
ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே
அது மாமரத்து கூட்டுக்குள்ளே அந்நாளிலே
நல்ல சோடியுடன் பாட்டெடுத்த பொன் நாளிலே
ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்ன போனது
அது ஒன்னாருந்த காலம் இப்ப எங்கே போனது
நாலு பக்கம் தேடித்தேடி நல்ல நெஞ்சு வாடுதடி
கூவுகிற கூவலெல்லாம் என்ன வந்து தாக்குதடி
இப்ப வருமோ எப்ப வருமோ ஒட்டி இருக்க ஒத்து வருமோ
ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே
அடி மொய்யெழுத வச்ச கிளி போராடுது
அத பொய்யெழுத வச்ச கிளி சீராடுது
இதில் யார சொல்லி குத்தம் இல்ல எல்லாம் நேரம் தான்
அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால் என்று பாரம் தான்
தித்திக்கும் செங்கரும்பே இத்தனைநாள் இங்கிருந்தே
மொட்டுவிட்ட தேனரும்பே போதுமடி உன்குரும்பே
விட்ட குறையோ தொட்ட குறையோ இந்த உறவு எந்த முறையோ
விட்ட குறையோ தொட்ட குறையோ இந்த உறவு எந்த முறையோ
ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே
அது இப்ப வருமோ எப்ப வருமோ
அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே
ஒரு சோலைகுயில் சோடி தன்ன தேடுது தேடுது மானே
அது நெஞ்சுங்கேட்டு நெனபுங்கேட்டு நிக்குது நிக்குது முன்னே
Comments
Post a Comment