நான் காற்று வாங்க போனேன் (Naan kaatru vanga ponaen)
படம்: கலங்கரை விளக்கம்
உணர்வு: ஏக்கம்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள்

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை

என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவமென்ற ஓடை

அவள் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும்
அவள் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள்
நல்ல நிலவு தூங்கு நேரம் அவள் நினைவு தூங்கவில்லை

கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள்
Comments
Post a Comment