சொல்லத்தான் நினைக்கிறேன் (Sollathaan ninaikkiraen)
படம்: சொல்லத்தான் நினைக்கிறேன்
உணர்வு: ஏக்கம்
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன்
காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மணவீடு அவன் தனிவீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
ஆஹா அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே
ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன்
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா
நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நேரில்
நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள் தான் பாதி என கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே
ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா
Comments
Post a Comment