நாடோடி பாட்டு பாட (Nadodi paatu paada)
படம்: ஹரிச்சந்திரா
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவது தானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல்
அழுகிற போது ஆறுதல் தானே காதல்
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய் பூவிலே தேன் தேடவா
கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும் போது மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை தாவுவதா நல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல்
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும்
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
Thank you
ReplyDeleteNice lyrics
ReplyDeletesuper song
ReplyDeleteமலர் விட்டு மலரை தாவுவதா நல்ல காதல்
ReplyDeleteஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல்....அருமையான வரிகள்