உதட்டுக்கும் கன்னத்துக்கும் (uthattukum kannathukkum)
படம்: பெண்ணின் மனதை தொட்டு
உணர்வு: வியப்பு
ஆக்கம்: வாலி
A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு
உன்கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடியேறுமா
பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா
A rose is a rose is a rose rose
நிலா தவமிருந்து முகமானதோ விண்மீன் விரகம் கொண்டு விழியானதோ (யயயயாய)
மழை மேகமெல்லாம் குழலானதோ மின்னல் இறங்கி வந்து இடையானதோ (யயயயாய)
மருதாணி இல்லாமலே உள்ளங்கை காட்டாத கோவை நிறம்
உள்ளங்கை இதுவானால் உள்ளெங்கும் எல்லாமே அல்வா நிறம்
உன்னை படைக்க தொடங்கும் போதே பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்
உன்னை படைத்து முடித்த பின்னே அவன் மூர்ச்சையாகி இருப்பான்
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு
A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose
உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன் (யயயயாய)
மண்ணில் விழுந்து உன் நிழல் எடுத்து மடியில் கட்டிக்கொண்டு அலைந்திருப்பேன் (யயயயாய)
உலகழகி ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்
ஒளி மலரே உனக்கு மட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்
உன்னை கண்டு ரசித்து கொண்டே என் காலம் போக வேண்டும்
உன் சுண்டு விரலை பிடித்து நான் சொர்க்கம் ஏற வேண்டும்
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு
உன்கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடியேறுமா
பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா
Rose is a rose is a rose rose
Rose is a rose is a rose rose
Rose is a rose is a rose rose
Rose is a rose is a rose rose
Comments
Post a Comment