கண்ணுபட போகுதைய்யா (Kannupada poguthaiyaa)

படம்: சின்ன கவுண்டர்
உணர்வு: பெருமை

ஊரு கண்ணு உறவு கண்ணு
நாய் கண்ணு நோய் கண்ணு
நல்ல கண்ணு நொள்ள கண்ணு
கண்ட கண்ணு முண்ட கண்ணு
கரிச்சு கொட்டும் எல்லா கண்ணும்
கண்ட பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே ஆமா

சாட்சிகள setup பண்ணும் வேலை இங்கு இல்லே இல்லே
வக்கீலு பொய்ய சொல்லுற வாதம் இங்கு வந்ததில்லே
ஏடெடுத்து படிச்சதிலே எவருக்குமே குறஞ்சதிலே
வாக்கெடுப்பும் நடந்திலே எதிலும் எப்பவும் தோத்ததில்லே
வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன்
வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன்
இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன்
இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன் ஹேய் 

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே

நாத்து நாடும் வேளையில பாட்டு ஒன்னு வேணும்
பாடுகுள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்
ஏர் புடிக்கும் கைபுடிச்சு நான் நடக்க வேணும்
அந்த எழுமல சாமி வந்து ஆதரிக்க வேணும்

எரெடுத்து நீ நடந்தா மாலை வந்து தோளில் விழும்
தோளிருக்கும் துண்டும் அங்க உங்க கைய சொல்ல வரும்
முத்தான பரம்பர தான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான்
எல்லோரும் உறவு முறை தான் ஏழையும் சாளையும் சரிசமம் தான்
ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும்
ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும்
அந்த கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு
கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு


கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)