இதற்கு பெயர் தான் காதலா (Itharku paeyar thaan kaathala)
படம்: பூவேலி
காண்பது எல்லாம் தலைகீழ் தோற்றம் என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்
ஆக்கம்: வைரமுத்து
பூமி என்பது தூரமனதே நட்சத்திரங்கள் பக்கமானதே
மனிதர் பேசும் பாஷை மறந்து பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து காண உருவம் கண்ணில் தோணுதே
அன்புத்திருமுகம் தேடி தேடி கண்கள் என்னை தாண்டி போகுதே
இதற்கு பெயர் தான் காதலா
புரியா மொழியோ புரிந்து போகும் புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக சரியா இருந்தும் சரிய செய்யும்
நிலவை போலவே இருளும் பிடிக்கும் உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
கண்ணாடி முன்னே பேசி பார்த்தல் வார்த்தைகள் எல்லாம் முண்டியடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ வார்த்தைகள் எல்லாம் நொண்டியடிக்கும்
பாதிப்பார்வை பார்க்கும் போதே பட்டாம்பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும் காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்
இதற்கு பெயர் தான் காதலா காதலா
இதற்கு பெயர் தான் காதலா
கண்கள் என்னும் இரண்டு ஜன்னல் திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும்
நான் என்பதில் இன்னொரு பாதி யார் என்பது இதயம் கேட்கும்
இதற்க்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
Comments
Post a Comment