வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் (Vaimaiyae Vellum Vaimaiyae Vellum)
படம்: வில்லாதி வில்லன்
வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் ஏட்டில் எழுதிய பழமொழி
வாயே வெல்லும் வாயே வெல்லும் நாட்டில் நிகழும் புதுமொழி
வாயில்லாதவன் வசதி படைத்தும் வாழ்க்கை அவன்கில்லையடா
வாயுள்ள ஒருவன் கையில் கிடைத்தால் காக்கை கூட வெள்ளையடா (சச்சா...)
வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும்
வாயே வெல்லும் வாயே வெல்லும்
கோட்டை பிடிப்பதும் வாயாலே
Courtல் ஜெயிப்பதும் வாயாலே
கடனை கேட்பதும் வாயாலே
அதை கழிக்க பார்ப்பதும் வாயாலே
பெண்ணும் ஆணும் திருமணம் செய்வது Brocker கொண்ட வாயாலே
பின் ஆணும் பெண்ணும் பிரிந்து வாழ்வது அவரவர் கொண்ட வாயாலே
மண்ணில் மனிதன் பிறப்பது மட்டும் மாதா என்னும் தாயாலே
பின் நன்மை தீமை ரெண்டும் அடைவது நாக்கு துடிக்கும் வாயாலே (சச்சா...)
வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் ஏட்டில் எழுதிய பழமொழி
வாயே வெல்லும் வாயே வெல்லும் நாட்டில் நிகழும் புதுமொழி
சாணக்யன் வென்றதும் வாயாலே
தசரதன் பெற்றதும் வாயாலே
யுத்தம் வருவதும் வாயாலே
யுத்தம் முடிவதும் வாயாலே
தீரா நோய்கள் தேகம் பெறுவது மென்று முடிக்கும் வாயாலே
பின் தீரா நோய்கள் தீர்ந்து போவதும் வைத்தியன் கொண்ட வாயாலே
மண்ணில் மனிதன் பிறப்பது மட்டும் மாதா என்னும் தாயாலே
பின் நன்மை தீமை ரெண்டும் அடைவது நாக்கு துடிக்கும் வாயாலே (சச்சா...)
வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் ஏட்டில் எழுதிய பழமொழி
வாயே வெல்லும் வாயே வெல்லும் நாட்டில் நிகழும் புதுமொழி
வாயில்லாதவன் வசதி படைத்தும் வாழ்க்கை அவன்கில்லையடா
வாயுள்ள ஒருவன் கையில் கிடைத்தால் காக்கை கூட வெள்ளையடா (சச்சா...)
Comments
Post a Comment