Newyork நகரம் (Newyork nagaram)
படம்: சில்லென்று ஒரு காதல்
உணர்வு: ஏக்கம்
ஆக்கம்: வாலி
Newyork நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே
நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
Newyork நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே
நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்கவைக்க நீயில்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை Coffee கொடுக்க நீயில்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவால் எடுக்க நீயிங்குயில்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயிங்குயில்லை
நான் இங்கே நீயுமங்கே இந்த தனிமையில் வருஷங்கள் நிமிஷமானதேனோ
வானிங்கே நீலமங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ
Newyork நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரில் உருவானதென்ன தேனா
ஜில்லென்று பூமியிருந்தும் இந்த குளிர்காலம் கோடையானதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பணிகட்டியாகுமே
Newyork நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே
நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
sir this song is written by Kavingar Vaali...ofcz all Kathir movies only Vaali writes
ReplyDeleteThank you very much. I have corrected it.
Delete