உன்னை தானே தஞ்சம் (Unnai thanae thanjam)

படம்: நல்லவனுக்கு நல்லவன்
உணர்வு: நம்பிக்கை

உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் எடுத்து ஒரு கோலமிட்டேன்

உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் எடுத்து ஒரு கோலமிட்டேன்
உன்னை தானே

மலரின் கதவொன்று திறகின்றதோ
மௌனம் வெளியேற தவிகின்றதா
பெண்மை புதிதாக துடிகின்றதோ
உயிரே அமுதங்கள் சுரகின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதால்
கட்டிபிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலமிடு
என்னை தானே

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலமிடு
என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)