ஒரு மணி அடித்தால் (Oru mani adithaal)


படம்: காலமெல்லாம் காதல் வாழ்க
உணர்வு: ஏக்கம்

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்

வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல என்றும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி பார்த்து பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடை தோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்

உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால்
கண்ணிரண்டும் நான் இழப்பேன் இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே எனை காணிக்கை தந்து விட்டேன்
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)